கள்ளக்குறிச்சியில் சாராயம் விற்றவர் கைது

கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை கைது செய்ததோடு கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் 400 லிட்டர் ஊறலை போலீசார் அழித்தனர்

Update: 2023-12-31 07:01 GMT

கள்ளச்சாராயம் விற்பனை 

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மோ.வன்னஞ்சூரில் வீட்டின் பின்னால் சாராயம் பதுக்கி விற்ற வெங்கடேசன் மீது வழக்குப் பதிந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், செம்பாக்குறிச்சி பஸ்நிறுத்தம் அருகே மதுபாட்டில் விற்ற, எஸ்.நரையூர் கிராமத்தை பொன்மணி, 30; என்பவர் மீது கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், கல்வராயன்மலையில் உள்ள நத்தம்பள்ளி தெற்குஓடை அருகே சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் 400 லிட்டர் ஊறலை போலீசார் அழித்தனர். இது தவிர பொது இடத்தில் மதுஅருந்தியது தொடர்பாக, கச்சிராயபாளையத்தில் ஒருவர் மீதும், தியாகதுருகம் பகுதியில் 2 பேர் என 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News