முத்தூரில் கள் விற்ற முதியவர் கைது
முத்தூரில் கள் விற்ற முதியவரை வெள்ளகோவில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-07 17:25 GMT
கள் விற்பனை செய்தவர் கைது
காங்கேயம் அடுத்த முத்தூர் அருகே செங்கோடம் பாளையம் பகுதியில் பனைமரத்தில் கள் இறக்கி விற்பனை செய்வதாக வெள்ளகோவில் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமுத்து தலைமையில் காவல்துறையினர் செங்கோடம்பாளையம் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மாகாளி அம்மன் கோவில் வீதி பகுதியில் கள் விற்பனை நடைபெற்று வருவதை போலீசார் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் தடை செய்யப்பட்ட பனைமர கள் விற்பனை செய்த வேலுச்சாமி வயது 70 என்ற முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து இரண்டு லிட்டர் பனை மர கள்ளை பறிமுதல் செய்தனர். இது குறித்து வெள்ளகோவில் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.