சாராயம் விற்ற 3 பேர் அதிரடி கைது
கள்ளகுறிச்சி மாவட்டம்,சங்கராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்ற மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Update: 2024-04-14 06:24 GMT
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதி சுடுகாட்டில் சாராயம் விற்ற கரடிசித்துார் முருகன், 44; அரசம்பட்டில் ரமேஷ், 40; விரியூர் சூசைநாதன், 44; ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 40 லிட்டர் சாராயத்தை கைபற்றினர்.