ஜூன் 4- இல் மதுபானக் கடைகள் இயங்காது
வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4-ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
Update: 2024-06-01 01:08 GMT
திருச்சி மாவட்டத்தில் உள்ள சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் மதுகூடங்கள், எப்எல் 2 முதல் எப்எல் 11 முடிய உள்ள பாா்கள் (எப்எல் 6 நீங்கலாக) என அனைத்து மதுபானக் கடைகளும் மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4- ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்கும். அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்வதையும், வேறிடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிா்க்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.