சிறுமி மாயம்; போலீஸ் விசாரணை
நத்தம் அருகே பெருமாள்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி மாயமான நிலையில், புகாரின் பேரில் போலீஸ் விசாரணை நடக்கிறது.;
Update: 2024-05-20 08:44 GMT
பைல் படம்
நத்தம் அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பரளியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் நத்தம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.