புகைப்படக்கலைஞர்கள் வாழ்வாதாரம் - மாவட்ட வீடியோ போட்டோ சங்கம் உதவி

புயல் பாதித்த பகுதி புகைப்படக்கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு நாமக்கல் மாவட்ட வீடியோ போட்டோ சங்கம் சார்பில் நிர்வாகம் உதவி;

Update: 2023-12-21 14:22 GMT

புயல் பாதித்த பகுதி புகைப்படக்கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு நாமக்கல் மாவட்ட வீடியோ போட்டோ சங்கம் சார்பில் நிர்வாகம் உதவி

தென்மாவட்டங்களில் பெய்த தொடர்மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டதன் விளைவாக புகைப்படக்கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது.

ஸ்டுடியோக்களில் பயன்படுத்தி வந்த கேமரா, கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் புகைப்பட உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து விட்டது. அப்பகுதி புகைப்பட கலைநர்களின் வாழ்வாதாரம் உயர்வடைய உதவிட நாமக்கல் மாவட்ட வீடியோ போட்டோ சங்க நிர்வாகம் கேமரா, கம்ப்யூட்டர், ப்ளாஷ், மற்றும் , அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் புகைப்பட கருவிகள் பழுது நீக்குவதற்காக ரொக்க தொகை ரூ. 63000/- நிவாரணத் தொகையாக தமிழ்நாடு வீடியோ போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன் மாநிலத் தலைவர் A. சிவக்குமார், மாநில துணைத்தலைவர் அசோக், மண்டலம் 3-ன் செயலாளர் S. ஜெகநாதன் ஆகியோரிடம் நாமக்கல் மாவட்டத் தலைவர் சதிஸ்குமார் மாவட்டச் செயலாளர் P.K.கண்ணன், மாவட்டப் பொருளாளர் P.சௌந்தர், இணைச் செயலாளர்கள் V.சீனிவாசன், மோகன்ராஜ் மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கபட்டது

Tags:    

Similar News