சேலம் : கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை
சேலம் மணிபால் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்தனர்;
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை
சேலம் , பெங்களூரு நெடுஞ்சாலை டால்மியா போர்டு அருகில் உள்ள மணிபால் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ குழுவினர் சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து மணிபால் மருத்துவமனையின் இயக்குனர் குரு ராகவேந்திரன் கூறியதாவது, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 31 வயது நபரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர்.
தானம் பெறப்பட்ட கல்லீரல், தமிழ்நாடு அரசு உறுப்பு மாற்று ஆணையத்தின் மூலம் மணிபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய நபருக்கு கொண்டு வந்து பொருத்தப்பட்டது. இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர்கள் ராஜீவ் லோச்சன், கார்த்திகேயன் செல்வராஜூ அகியோர் அடங்கிய மருத்துவ குழுவினரால் வெற்றிகரமாக செய்தனர்.
தற்போது அந்த நபர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வீடு திரும்பினார். 4 ஆண்டுகளுக்கு பிறகு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதால் மணிபால் மருத்துவமனையின் நிர்வாகம் மற்றும் மருத்துவக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.