மினிட் டெம்போ சரக்கு வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்து

மினி டெம்போ சரக்கு வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.;

Update: 2024-06-17 16:23 GMT

விபத்து

 சேலம் மாவட்டம் மேட்டூர் தங்கமாபுரிபட்டனம் பகுதியை சேர்ந்த செல்வம் (45)இவர் இன்று மதியம் சரக்கு வேனில் நகப்பழம் ஏற்றிக் கொண்டு கல்வடங்கம் பகுதியில் இருந்து எடப்பாடி நோக்கி செல்லும் சாலையில் செல்லும் போது அரசிராமணி மேட்டுப்பாளையம் வத்தன்காடு பகுதியில் சரக்கு வேன் அதிவேகத்தில் சாலையில் தாறுமாறாக தறிகொட்டு அங்கும் இங்கும் ஒடி கண் இமைக்கும் நேரத்தில் சரக்கு வேன் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி கம்பத்தை உடைத்து கொண்டு விவசாயி பெரியண்ணன் தகர அட்டை வீட்டில் உரசி மோதி நின்றது.

Advertisement

இதனையடுத்து வீட்டில் படுத்து தூங்கி இருந்த விவசாயி சத்தம் கேட்டு பயந்து போய் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்ததில் வேன் மின் கம்பத்தை உடைத்து கொண்டு வீட்டில் மோதியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதனையடுத்து செந்தில்குமார் தேவூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் தேவூர் போலீசார் விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் செல்வத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தேவூர் மின்வாரிய துறையினர் மின் இணைப்பை துண்டித்து உடைந்த மின் கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News