முட நீக்கியல் மையம்-ஆட்சியர் தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் முட நீக்கியல் மையம் அமைக்க கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;
Update: 2024-02-07 09:03 GMT
மாவட்ட ஆட்சியர்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) மூலமாக முட நீக்கியல் மையம் அமைக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் புகைப்படம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் மாவட்ட நிர்வாகத்தின் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.