தாட்கோவில் மானியத்துடன் கடனுதவி

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க்க தாட்கோவில் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-15 06:43 GMT

மாவட்ட ஆட்சியர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு உடற்பயிற்சி சிகிச்சை மையம் (பிசியோதெரப்பி) அமைக்க தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது.கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு உடற்பயிற்சி சிகிச்சை மையம் (பிசியோதெரப்பி கிளினிக்) அமைக்க 'தாட்கோ'வில் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சொந்த கட்டடம் வைத்திருப்பவர்களும், வாடகை அடிப்படையில் இடம் தேர்வு செய்யும் நபர்களும், தொழில்முனைவோர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். கிளினிக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சி, தொழில் தொடங்க திட்ட அறிக்கை தயார் செய்ய ஆலோசனைகள் தனியார் நிறுவனம் மூலம் வழங்கப்படும்.

இதற்கான உரிமையாளர் கட்டணத்தில் இருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும். பிசியோதெரப்பி பிரிவில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்தவர்கள் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்த 18 - 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம். பிசியோதெரப்பி பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழக்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிக்கு 'தாட்கோ' மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .

Tags:    

Similar News