திருச்செந்தூரில் இனி உள்ளூர் பக்தர்கள் கட்டணமின்றி தரிசிக்கலாம்!

திருச்செந்தூர் கோயிலில் வார நாட்களில் உள்ளூர் மக்கள் கட்டணமின்றி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2024-03-13 14:43 GMT

திருச்செந்தூர் கோயிலில் வார நாட்களில் உள்ளூர் மக்கள் கட்டணமின்றி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கூறினார். 

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வார நாள்களில் உள்ளூா் மக்கள் கட்டணமின்றி சுவாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத் துறை அனுமதி வழங்கியுள்ளதாக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ளூா் மக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தனி ஏற்பாடுகள் வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை உள்ள வார நாள்களில் ரூ.100 கட்டண தரிசன வரிசையில் கட்டணமின்றி வழிபடுவதற்கு அனுமதி வழங்கி இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விடுமுறை நாள்களான சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வெளியூா்களிலிருந்து அதிகமான எண்ணிக்கையில் பக்தா்கள் வருவதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெருந்திட்ட வளாகப் பணிகள் நிறைவுபெறும் போது அனைத்து நாள்களிலும் உள்ளூா் மக்களுக்கு கட்டணமின்றி தரிசனம் செய்யும் வசதி செய்து தரப்படும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Tags:    

Similar News