தனியார் மதுபானக்கூடத்திற்கு பூட்டு - ஆட்சியர் அதிரடி

தென்காசியில் தனியார் மதுபானக்கூடத்தை மூட ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து மதுபான கூடத்தை அதிகாரிகள் மூடினர்

Update: 2024-05-11 04:45 GMT
தென்காசியில் தனியார் மதுபானக்கூடத்திற்கு பூட்டு: ஆட்சியர் அதிரடி

தென்காசி நகர பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளியான ஐ. சி. ஐ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே உள்ள மனமகிழ் மன்றத்தில் நேற்று முன்தினம் புதியதாக தனியார் சொகுசு மதுபான பார் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த தனியார் மதுபான பாருக்கு நேர் எதிரே அரசு தொழிற்பயிற்சி கூடம் அரசு அலுவலகங்கள் மற்றும் அந்த பகுதியில் தனியார் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, தனியார் மருத்துவமனை உள்ளநிலையில், அதில் பயிலும் மாணவ, மாணவிகளும் பொது மக்களும் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் அந்த மதுபான பாரை உடனடியாக மூட வேண்டும் இல்லையெனில் மாணவர் சமுதாயம் மிகப்பெரிய சீரழிவுக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்படும் என அதிமுக பிரமுகர் டேனி அருள் சிங் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து தென்காசி காவல்துறையினர் புதிதாக திறக்கப்பட்ட தனியார் மதுபான பாருக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் திறக்கப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதை அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக அந்த மது பான பாரை உடனடியாக மூட உத்தரவிட்டார். இதை அடுத்து மதுபானக் கூடத்திற்கு நேற்று போலீசார் பூட்டு போட்டனர்.

Tags:    

Similar News