ஜேடர்பாளயம் அருகே பூட்டிய வீட்டை திறந்து நகை திருட்டு.
பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே பூட்டிய வீட்டை திறந்து நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்.;
பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே பூட்டிய வீட்டை திறந்து நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்.
பரமத்தி வேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையம் அருகே உள்ள சோழசிராமணி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (52). கூலித்தொழிலாளி. இவர் குடும்பத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டி சாவியை பாத்ரூமில் யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் வெளியூர் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு சாத்தப்பட்டு இருந்த நிலையில் பூட்டு மட்டும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து பார்த்துள்ளார். பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 8 ஆயிரம் திருடி சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று குப்புசாமி ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் திருட்டு போன 9 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 8 ஆயிரத்தை கண்டு பிடித்து தருமாறு புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.