குன்னம் அருகே ரூ.50 ஆயிரம் பறிமுதல்
குன்னம் அருகே ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.50 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-04-09 07:56 GMT
பறிமுதல் செய்யப்பட்ட பணம்
பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, பணம் பொருட்கள் ஏதும் எடுத்துச் செல்லப்படுகிறது என தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில், பறக்கும் படை குழுவினர், நல்லூர் - பெருமத்தூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அப்போது அங்கு வந்த பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சித்தலி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் பிச்சை பிள்ளை வயது 41 என்பவர் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த 50,000 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை குழுவினர், பறிமுதல் செய்தனர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை. குன்னம் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.