லாரி மோதி லாரி ஓட்டுநர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

அரியலூர் அருகே லாரிக்கு அருகில் நின்று இருந்த ஓட்டுநர் மீது, மற்றொரு லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

Update: 2024-05-13 09:04 GMT

சங்கர் 

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். லாரி ஓட்டுனர். இவர் தனது லாரியில் அரியலூரில் உள்ள டால்மியா சிமெண்ட் ஆலைக்கு நிலக்கரி ஏற்றி வந்தார். சிமெண்ட் ஆலையில் நிலக்கரியை இறக்கி விட்டு கொல்லாபுரம் கிராமத்தில் சாலையின் ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு, காலை கடமையை முடித்துவிட்டு, மீண்டும் லாரி ஏறி‌முற்பட்டபோது, பின்னால் ராம்கோ சிமெண்ட் ஆலையில் இருந்து, சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி‌ மோதியது.

விபத்தில் சம்பவ இடத்திலேயே சங்கர்  உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் சங்கரின் உடலை மீட்டு அரியலூர் காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்தியலாரி ஓட்டுனர் கருணாநிதியை கைது செய்து அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News