பைக் விபத்தில் லாரி உரிமையாளர் பலி
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Update: 2024-03-24 03:33 GMT
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சிப்பிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (45). சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இன்று காலையில் செல்வகுமார் தனது இருசக்கர வாகனத்தில் ஊரிலிருந்து கோவில்பட்டி நோக்கி வந்துள்ளார். வெங்கடாசலபுரம் விலக்கு அருகே வந்தபோது, கோவில்பட்டியில் இருந்து திருவேங்கடம் நோக்கி சிமெண்ட் மூடைகளை ஏற்றிச்சென்ற ஈச்சர் லாரி அவரது பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்தசெல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.