லாட்டரி சீட்டு விற்றவர் கைது

NSK நகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-25 12:09 GMT

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடப்பதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் ரூபினிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 24ஆம் தேதி மதியம் 12.30 மணி அளவில், வெங்கமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அருகில் உள்ள என் எஸ் கே நகர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும், வெங்கமேடு குளத்து பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் கண்ணன் வயது 40 என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது.

மேலும், விற்பனைக்கு வைத்திருந்த ரூபாய் 150 மதிப்புள்ள ஒன்பது டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags:    

Similar News