காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை

Update: 2023-11-04 09:00 GMT

காதலர்கள் தற்கொலை


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிப்பாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகர் இவரது மகன் அருண் (வயது 22). இவர் கடந்த 6 வருடங்களாக மதுராந்தகத்தில் உள்ள ரீவைண்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வருகிறார்.இவர் மதுராந்தகம் அருகே உள்ள புது மாப்பக்கத்தில் பிரகாஷ் என்பவர் வீட்டில் வாடகை எடுத்து தங்கி உள்ளார்.

மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி இவரது மகள் ஜனனி (வயது 17).தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

இதனால் அருண், ஜனனிஆகிய இருவரும் அருண் வாடகை வீடு எடுத்து தங்கியுள்ள மதுராந்தகம் அடுத்த புது மாம்பாக்கம் வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தனர்.தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும்,இந்த தற்கொலை சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா?அல்லது வேறு யாராவது கொலை செய்து மாட்டிவிட்டார்களா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News