பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
தலைவாசல் அருகே காதல் திருமணம் செய்த ஜோடி பாதுகாப்பு வழங்கக்கோரி கெங்கவல்லி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
Update: 2024-04-30 06:49 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள பெரியபுனல்வாசல் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கோகுல் (வயது 24). நாவகுறிச்சியை சேர்ந்தவர் செல்வி (24). இவர்கள் 2 பேரும் சாத்தப்பாடி தொலைபேசி அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களாக வேலை செய்து வந்தனர். அப்போது 2 பேரும் காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி நேற்று வீட்டை விட்டு வெளியேறி புனல்வாசல் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இரு வீட்டு பெற்றோரையும் அழைத்த சமாதானம் செய்தனர். பின்னர் காதல் ஜோடியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.