மாதவரம்: அதிக ஒளி பாய்ச்சிய படகு பறிமுதல்
ராமநாதபுரம் அதிக ஒளி பாய்ச்சி தடை செய்யப்பட்ட முறையில் மீன் பிடித்த படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொண்டி அருகே அதிக ஒளி பாய்ச்சி மீன்பிடித்த படகை மீன் வளத்துறையினர் பறிமுதல் செய்தனர். இரட்டை மடி முறை, சுருக்கு மடி முறையில் மீன் பிடிப்பதால் மீன் இனம் அழிவதால் இம்முறையில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அதிக ஒளித்திறன் கொண்ட போக்கஸ் லைட் கொண்டு மீன் பிடிப்பதும் தடை செய்யப் பட்டுள்ளது. இது குறித்து மீன் வளத் துறை அதிகாரிகளால் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இருப்பினும் இம்முறையில் சில மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடித்து வருகின்றனர்.
இன்று அதிகாலை நம்பு தாளை கடல் பகுதியில் மீன் பிடித்த சோலியக்குடி பகுதி மீனவர் கள் மீன் பிடிப்பதை அறிந்த நம்புதாளை மீனவர் ஆறுமுகம் உள்ளிட்ட மீனவர்கள் படகை பறிமுதல் செய்தனர். நம்புதாளை மீனவர் சங்க தலைவர் சத்திேயேந்திரன் புகாரின் அடிப்படையில் கடல் அமலாக்க துறை ஆய்வாளர் குருநாதன், மீன் வள ஆய்வாளர் அபுதாஹிர், மேற்பார்வையாளர் கணேஷ் குமார், காவலர் காதர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்க்கு சென்று படகை பறிமுதல் செய்து விசாரனை செய்தனர்.
இதில் படகு பதிவு செய்யப்படாத படகு என்றும் தடை செய்யப்பட்ட முறையில் மீன் பிடித்ததால் படகு, இஞ்சின், லைட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றனர்.