மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-27 10:36 GMT

இயக்குனர் பேட்டி 

 இந்திய அளவில் நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது கலை, இலக்கியம், கல்வி, சேவை, பொதுவாழ்வியல் என பல்வேறு பணிகளை பாராட்டி கொடுக்கப்படும் விருதாகமும்.

இந்நிலையில் மதுரையில் சேவைகளுடன் கண் மருத்துவ பணியில் ஈடுபட்டுவரும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு மருத்துவ சேவையை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரவிந்த் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் கோவிந்தப்ப நாச்சியார் செய்தியாளர்களிடம், மருத்துவம் சார்ந்த மக்கள் பணிக்கு எங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இது தனி நபருக்காக வழங்கப்பட்ட விருது இல்லை. ஒட்டுமொத்தமான எங்களுடைய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விருது. ஆரம்ப காலகட்டத்தில் 12 படுக்கைகளைக் கொண்டு கண் மருத்துவம் செய்து வந்த நாங்கள் தற்போது தினமும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு கண் தொடர்பான சிகிச்சை அளித்து வருகிறோம்.

அதேபோல் ஒரு நாளைக்கு 5000 ஆப்ரேஷன்கள் செய்து வருகிறோம். எங்களிடம் 450 கண் மருத்துவர்கள் உள்ளனர். செவிலியர்கள் 2500 பேர் உள்ளனர். இப்படி ஒட்டுமொத்தமாக 6 ஆயிரம் நபர்கள் எங்களுடைய நிறுவனத்தில் பணி செய்கிறோம். 16 இடங்களுக்கு மேல் எங்களுடைய மருத்துவமனை உள்ளது. அதுபோக கண்ணொளி மையம், கிராம முகாம் என பலதரப்பட்ட சேவைகளை செய்து வருகிறோம். 48% இலவசமாகவும், 52% பணம் பெற்றுக் கொண்டும் எங்களுடைய கண் மருத்துவமனையை செயல்படுத்தி வருகிறோம்.

அதிக அளவு நோயாளிகளுக்கு குறைந்த அளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவம் செய்வதால் எங்களால் சிறப்பாக இயங்க முடிகிறது. அதிகளவு கண் மருத்துவப் பணியில் வேலை செய்வதால் குறைந்த செலவில் தரமான மருத்துவத்தை வழங்குகிறோம்.

கண் சார்ந்த மருத்துவ பணி மட்டும் இல்லாமல் ஒவ்வொரு கண் மருத்துவம் சார்ந்த பொருளையும் நாங்களே தயாரித்து செய்கிறோம். ஆராய்ச்சி நிலையம் முதற்கொண்டு எங்களிடம் உள்ளதால் இதனை சேவையாக செய்ய முடிகிறது. 20 ரூபாய்க்கு கூட கிராமங்களில் மருத்துவம் செய்கிறோம் இலவசமாகவும் மருத்துவம் செய்கிறோம் கூடுதல் மருத்துவத்திற்கு போதுமான பணம் வாங்கிக் கொள்கிறோம் இப்படி எல்லா தரப்பினருக்கும் நாங்கள் மருத்துவம் செய்வதால் எங்களால் சிறப்பாக செயல்பட முடிகிறது. பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

ஏற்கனவே நாங்கள் பல்வேறு விருதுகளை நாங்கள் நிறுவனத்திற்காக பெற்றுள்ளோம்" என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

Tags:    

Similar News