மதுரை மாநகர் முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனை !
பைக் ரேஸ் ஈடுபட்டு வருவதாக தகவல் வந்த நிலையில் மதுரை மாநகர் பகுதி முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-12 11:41 GMT
வாகன சோதனை
மதுரை மாநகர் பகுதியில் பைக் ரேஸ் ஈடுபட்டு வருவதாக செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக பைக் வீலிங் செய்த இருவர் கைது செய்யப்பட்டு அவருடைய லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் மதுரை மாநகர் முழுவதும் போக்குவரத்து காவல்துறை சார்பாக வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டு வருகிறது. மேலும், விலை உயர்ந்த வாகனங்களில் வரும் இளைஞர்களை தடுத்து நிறுத்தி உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்பதை சோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.