சரிவு... மதுரை மல்லி கிலோ 1200 ரூபாய்க்கு விற்பனை

மதுரை மல்லி விலை சரிவு; கிலோ 1200 ரூபாய்க்கு விற்பனை

Update: 2023-11-30 13:48 GMT

மழையால் சரிந்த மல்லிகை விலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடந்த சில நாட்களாக மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களுக்கு வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர், சிலைமான், வலையங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தியாகும் பூக்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரத்திலிருந்தும் இங்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்தைப் பெற்றுள்ள மதுரை மல்லிகை அதன் மணம், தன்மை ஆகியவற்றில் தனிச்சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. மலேசியா துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு மதுரை மல்லிகை ஏற்றுமதி ஆகிறது. திருக்கார்த்தியை முன்னிட்டு கிலோ ரூ. 1,800க்கு விற்பனையாகி வந்த மதுரை மல்லிகை, இன்றைய நிலவரப்படி கிலோ ரூ. 1,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாகவும் விளைச்சல் குறைந்து இருப்பதாலும் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. பிச்சி ரூ.200, முல்லை ரூ.200, சம்பங்கி ரூ.120, செண்டு மல்லி ரூ.100, அரளி ரூ.400, பட்டன் ரோஸ் ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.180 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர் மழை காரணமாக குறைந்துள்ள உற்பத்தியால் இந்த விலையே கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News