மதுரையில் கள்ளழகர் எதிர்சேவை- பக்தர்களுக்கு உதவும் தன்னார்வலர்கள்!
மதுரையில் கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பக்தர்கள் வெயிலை சமாளிக்கும் வகையில் தண்ணீர் பாட்டில்,விசிறி , நீர் மோர் போன்றவற்றை தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.
சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் உலக பிரசித்தி பெற்ற வைகை ஆற்றில் கள்ளழகர் நாளை இறங்குவதற்காக நேற்று ஞாயிறு மாலை அழகர் கோவிலில் இருந்து மதுரை நோக்கி அழகர் வந்து கொண்டு உள்ளார். மதுரை அழகர் கோவிலில் இருந்து கடச்சனேந்தல் வழியாக மூன்றுமாவடி வந்த அழகரை மூன்று மாவடியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு எதிர்சேவை செய்து வரவேற்பது வழக்கம்.
இந்த வருடம் சித்திரை மாதத்தில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மதுரையில் 105டிகிரி அதிகமான வெயில் அடிப்பதால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் வழிநடுகிலும் 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகள் உள்ளதால் ஆங்காங்கே சிறிது ஓய்வு எடுத்துக் கொள்கின்றனர். இருந்த போதிலும் கடந்த வருடங்களை விட இந்த அளவு இந்த வருடம் அதிகமான அளவில் பொதுமக்கள் தொண்டு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் தன்னார்வலர்கள் அதிக அளவில் வரக்கூடிய பக்தர்களுக்கு நீர் மோர், தண்ணீர் பாட்டில், மற்றும் வெயிலை குழந்தைகள் சமாளிக்கும் வகையில் விசிறிகள் விநியோகம் செய்து வருகின்றனர். இவ்வாறு வழங்கப்படும் தண்ணீர் நீர்மோர் விசிறிகளை பக்தர்கள் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வெயிலை சமாளித்து வருகின்றனர்.