முகூர்த்தக்கால் நட்டு கோலகலமாக துவங்கிய சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா பணிகள் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் கோலகலமாக தொடங்கியது. ஏப்ரல் 12 ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் -21 ஆம் தேதி மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், 22ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளது

Update: 2024-03-21 01:56 GMT

முகூர்த்தக்கால்

உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவானது மிகவும் பிரசிதிபெற்றதாகும். 15நாட்கள் திருவிழாவான சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.  இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான பணிகள் தொடங்கும் வகையில் மீனாட்சியம்மன் கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து யானை முன்செல்ல முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து தேரடிக்கு கொண்டுவரப்பட்டு. அங்கு மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு முகூர்த்தகால் நடப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் வளாத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திலும் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து சித்திரை திருவிழாவானது ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 19 ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 20ஆம் திக்குவிஜயமும், ஏப்ரல் - 21 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 22 ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது முகூர்த்தக்கால் நடப்பட்ட நிலையில் மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கியது. . இதேபோன்று கள்ளழகர் கோவிலை பொறுத்தமட்டில் ஏப்ரல் 22 ஆம் தேதி இரவு கள்ளழகர் எதிர்சேவையும், ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வானது நடைபெறவுள்ளது.

Tags:    

Similar News