திருப்பத்தூரில் ஸ்ரீ ஞான விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருள்மிகு ஸ்ரீ ஞானவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது

Update: 2023-11-19 09:23 GMT

ஸ்ரீ ஞான விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் டவுன், காமராஜர் நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஞானவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஊர் பொதுமக்கள் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை மங்கல இசை விநாயகர் பூஜை இரண்டாம் கால யாக பூஜைகள் மகாலட்சுமி ஓமம் திரவிய ஹீதி, நாடி சந்தானம் மகாதீபாராதனை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து யாத்ரா தானம் திரவ கலசங்கள் புறப்பாடு ஆலய கோபுர கலச கும்பாபிஷேகம் தொடர்ந்து மூலவர் பரிவாத தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அலங்காரம் தரிசனம் தசதானம் மகாதீபாராதனை பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் அதிவிமரிசையாக நடைபெற்றது.

கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அரோகரா! அரோகரா! என்று பக்தி மணக்க கோஷங்கள் எழுப்பப்பட்டன இந்த நிகழ்ச்சியில் சுமார் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது!

Tags:    

Similar News