ஆபத் சகாயேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
மதுராந்தகம் அருகே ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோவிலில் நடந்த மகாசிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே புதுப்பட்டு கிராமத்தில் ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ ஆபத் சகாயேஸ்வர ர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இரவு ஏழு மணி முதல் 9 மணி வரைமுதல் கால அபிஷேகம், பிரம்மன் சிவனை வழிபடும் அபிஷேகமும், இரவு 9.30 மணியிலிருந்து 12 மணி வரை இரண்டாம் கால அபிஷேகம், திருமால் சிவனை வழிபடும் காலம் அபிஷேகம், மூன்றாம் கால அதிகாலை 12.30 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சக்தி சிவனை வழிபடும் லிங்கோத்பவ காலம்,நான்காவது கால அபிஷேகம் அதிகாலை 3:30 மணியிலிருந்து அதிகாலை 5.30 மணி தேவர்கள் முனிவர்கள் சித்தர்கள் பூதக்கணங்கள் அனைத்து உயிரினங்களுக்கும் வழிபடும் காலம் அபிஷேகம் காலம் நான்கு கால அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது..
மகாசிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு வழிபட்டால் பக்தர்களுக்கு 32 ஆண்டுகள் தரிசனம் செய்த பலன் கிடைக்கும் எனவும் ராமபிரானம் அகத்தியர் பெருமானம் வழிபட்ட தலம் எனவும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானமும் வழங்கப்பட்டது..முன்னதாக விவேகானந்த வித்தியலயா தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் கலை நடன நிகழ்ச்சி நடைபெற்றது.