முப்பெரும் தேவிகள் கோவிலில் மகா உற்சவ பெருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகரில் உள்ள முப்பெரும் தேவிகள் கோவிலில் மகா உற்சவ பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-06-16 08:19 GMT

முப்பெரும் தேவிகள் கோவிலில் மகா உற்சவ பெருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகரில் சீதளி வடகரையில் இருந்து வரும் தமிழகத்தின் நதிகளின் இளவரசி என்று அழைக்கப்படும் காவிரி படுகையிலிருந்து தூக்கிவரப்பட்ட அரியலூர் மாரியம்மன், யாதவ குலத்தில் பிறந்த காளியம்மன், திருப்பத்தூர் முத்துமாரியம்மன் ஆகிய முப்பெரும் தேவிகள் சங்கமிக்கும் திருக்கோவிலில் மகா உற்சவ பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக பக்த கோடிகள் பால்குடம், அக்னி சட்டிகளை ஏந்திய வண்ணம் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பால் சந்தனம் முதலிய 16 திரவியங்களுடன் அம்மனுக்கு அபிஷேகமும் தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் விழா குழு சார்பாக நீர், மோர், பாணக்கம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் இரவு மதுரை, திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்பது சாமியாடிகள் தலைமையில் சாமி ஆட்டமும், அருள்வாக்கு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News