மகாதேவர் ஆலய கும்பாபிஷேகம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த கல்லு பாலம் மகாதேவர் ஆலய கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ஆற்றூர் கல்லுபாலம் மஹா தேவர் ஆலய கும்பாபிஷேக திருவிழா கடந்த 17 ம் தேதி துவங்கியது.மூன்று நாட்கள் கணபதிஹோமம் மிர்துஞ்சியஹோமம் உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.யாக குண்டத்தில் பூஜிக்கபட்ட புனித நீரை சிவாச்சாரியர்கள் வேதபண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க எடுத்து சென்று விமானத்தில் அமைந்துள்ள கும்த்தில் புனித நீரால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தொல்லியல்துறை ஆய்வில் 1200ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கோயில் என்பது குறிபிட்ட தக்கது இந்த ஆலயத்தில் வழிபட்டால் கேரள மாநிலம் வைக்கம் சிவனையும் சிதம்பரம் நடராஜரையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம் இந்து அறநிலைய துறை கட்டுபாட்டில் இந்த ஆலயம் இருந்தாலும் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்த அறநிலைய துறை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பக்தர்கள் ஒருங்கிணைந்து இன்றைய தினம் கும்பாபிஷேகம் நடத்தியது குறிப்பிடதக்கது.