3வது முறையாக மோடியை வெற்றி பெற செய்யுங்கள் - டிடிவி தினகரன்
இண்டியா கூட்டணி தலையில்லாமல் முண்டமாக உள்ளது. பிரதமர் வேட்பாளரையை கண்டுபிடிக்க முடியாமல் தேடி கொண்டு இருக்கிறார்கள். தொகுதிக்கு தேவையான திட்டங்களை மேற்கொள்ள 3வது முறையாக மோடியை வெற்றி பெற செய்யுங்கள் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் TTV தினகரன் பேசுகையில், இந்தியாவை உலக அளவில் தலைநிமிர செய்தவர் மோடி. திமுக கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார் என்று முதல்வர் இங்கு வரும் போது நீங்கள் கேட்க வேண்டும். இண்டியா கூட்டணி தலையில்லாமல் முண்டமாக உள்ளது. பிரதமர் வேட்பாளரையை கண்டுபிடிக்க முடியாமல் தேடி கொண்டு இருக்கிறார்கள்.
3 ஆண்டுகளாக விடியா ஆட்சி நடத்திய ஸ்டாலினை போடலாமா என்று தேடி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக கட்சியை மீண்டெடுத்து உங்களிடம் கொடுக்க தான் நானும் ஓபிஎஸ்ம் போராடுகிறோம். அதிமுக கூட்டணியில் யாருயா போட்டி இடுகிறார்கள்.நான், ஒபிஎஸ் தேர்தலில் தைரியமா போட்டியிடுகிறோமே. பழனிச்சாமி போட்டியிட வேண்டியது தானே.பாவம் விருதுநகரில் விஜயகாந்த் மகனை போட்டியிட வைத்துள்ளனர்.தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி துணையுடன் போதை பொருள் விற்கபடுவதாக மோடி கூறினார். தேர்தல் முடிந்த பின்பு எந்த நிதி எல்லாம் சிறைக்கு செல்ல போகிறார்களோ தெரியில்லை. சாதிக் விவகாரத்தை சொல்கிறேன் என்றார்.தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மற்றும் அமமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.