வடக்கனந்தல் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
கள்ளகுறிச்சி மாவட்டம், வடக்கனந்தல் பேரூராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.;
Update: 2024-01-06 05:47 GMT
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
வடக்கனந்தல் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடந்தது. கச்சிராயபாளையம், வடக்கனந்தல் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் தனியார் மண்டபத்தில் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் ஷர்வண்குமார் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் ராஜலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஷெர்லிஏஞ்சலா, பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதயசூரியன் எம்.எல்.ஏ., முகாமை துவங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ராஜலட்சுமி வரவேற்றார்.