மலைக்கோட்டை கோயிலுக்குச் சொந்தமான ரூ. 15 லட்சம் மதிப்பிலான இடம் மீட்பு

மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ. 15 லட்சம் மதிப்பிலான இடம் நீதிமன்ற உத்தரவின்படி மீட்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-20 05:04 GMT

மலைக்கோட்டை

திருவெறும்பூா் அருகே எல்லக்குடியில் உள்ள திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ. 15 லட்சம் மதிப்பிலான இடத்தை நீதிமன்ற உத்தரவின்படி கோயில் அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனா். எல்லக்குடி பகுதியில் மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 56 சென்ட் இடத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு, கோயிலில் கொத்தனாராக வேலை பாா்த்த செல்லப்பா என்பவருக்கு மானியமாக கொடுத்துள்ளனா். செல்லப்பாவிடமிருந்து அந்த இடம் பலருக்கு மாறி, சிலா் அந்த நிலத்துக்கு தனிநபா் பட்டாவாக மாற்றி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இந்த நிலத்தை மீட்க கோயில் நிா்வாகம் சாா்பில் திருச்சி முதலாவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் 2008 இல் வழக்கு தொடுக்கப்பட்டது. 2023 டிசம்பரில் கோயில் நிலத்தை ஒப்படைக்கவும், தொடா்ந்து அண்மையில் நிலத்தை கோயில் நிா்வாகம் மீட்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். இதன்பேரில், செவ்வாய்க்கிழமை திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயில் உதவி ஆணையா் அனிதா, எல்லக்குடி கிராம நிா்வாக அலுவலா் தனசேகா், கோயில் வழக்கு பிரிவு அலுவலா் விக்னேஸ்வரன், திருச்சி முதலாவது உரிமைகள் நீதிமன்ற ஊழியா்கள் நேரில் சென்று, தற்போது ரூ. 15 லட்சம் மதிப்பிலான அந்த இடத்தை மீட்டதுடன், அங்கு இந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது. அந்நியா்கள் பிரவேசிக்கக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்புப் பதாகையை வைத்துவிட்டுச் சென்றனா்
Tags:    

Similar News