கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு: தலைவர் உள்பட மூவர் கைது

எடப்பாடி வெள்ளரி வெள்ளி கூட்டுறவு கடன் சங்கத்தில் மூன்று கோடி முறைகேடு தலைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-02 16:00 GMT

கைது செய்யப்பட்டவர்கள்

எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மூன்று கோடி ரூபாய் முறைகேடு தலைமறைவாக இருந்த தலைவர்,துணைதலைவர்,நிர்வாககுழு உறுப்பினர் ஆகியோரை பொருளாதார குற்றபிரிவினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில்  சத்தியபானு தலைவராகவும், வடிவேல் துணை தலைவராகவும் இருந்தனர். சங்கத்தின் செயலாளராக மோகன்,துணை செயலாளராக மணி ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் கூட்டுறவு சங்கத்தில் நகைகடன் வழங்கியது.வைப்புதொகை பெற்றது.

மற்றும் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கியது என ரூ.3கோடி  ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் தலைவர்  சத்தியபானு மற்றும் செயலாளர் மோகன்,துணை தலைவர் வடிவேல்,துணை செயலாளர் மணி,கூட்டுறவு சங்கங்களின் கள மேற்பார்வையாளர்  ஆனந்தகுமார் ,நிர்வாககுழு உறுப்பினர் வேலுசாமி ஆகியோர் மீது சங்ககிரி கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் முத்துவிஜயா,சேலம் பொருளாதார குற்றபிரிவு போலீசில் புகார் செய்தார்.

வழக்கு பதிவுசெய்த போலீசார் கடந்த  2023ம் ஆண்டு ஜீலை 11ம் தேதி கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மோகன்,கூட்டுறவு சங்கங்களின் கள மேற்பார்வையாளர் ஆனந்தகுமார்,துணைச்செயலாளர் மணி ஆகியோரை கைது செய்யப்பட்டு இருந்தனர்.  

அதனை தொடர்ந்து இன்று காலை தலைமறைவாக இருந்த சங்கத்தின் தலைவர் சத்தியாபானு,துணைத் தலைவர் வடிவேலு மற்றும் நிர்வாககுழு உறுப்பினர் வேலுசாமி ஆகியோரை பொருளாதார குற்றபிரிவு காவல் ஆய்வாளர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் கைதுசெய்தார்.

Tags:    

Similar News