கள்ளச்சாராயம் அருந்திய நபர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நபர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளார்.

Update: 2024-06-21 16:25 GMT

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நபர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நபர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த 38 வயதான கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை எம்ஜிஆர் நகரில் வசித்து வருகிறார் இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்துள்ளார். சொந்த ஊரை விட்டு இன்று சென்னை வந்து அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது வயிற்றுப்போக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் கேகே நகர் இ எஸ் ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கிருஷ்ணமூர்த்தியை மேல் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News