சட்டவிரோதமாக பாறை உடைத்தவர் கைது
கன்னியாகுமரி சிதாறால் பகுதியில் சட்டவிரோதமாக பாறை உடைப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடுத்து மேற்கொண்ட சோதனையில் ஒருவரை கைது செய்தனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிதறால், பள்ளிகோணம் பகுதியில் சட்டவிரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதாக அருமனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.போலீசார் குறிப்பிட்ட பகுதி சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சிலர் இயந்திரங்கள் மூலம் பாறைகளை வெட்டி எடுத்துக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். போலீசார் அங்கு சென்றதும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் ஓடி விட்டனர்.
ஆனால் பாறை உடைக்கும் கம்பரசர் இயந்திரத்தின் உரிமையாளர் போலீஸிடம் சிக்கினார். விசாரணையில் அவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பகுதியை சேர்ந்த ஜோதி (46) என்பது தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசார் கம்பரசரை பறிமுதல் செய்தனர். மேலும் நிலத்தின் உரிமையாளர் சிதறால் காட்டு விளை பகுதியை சேர்ந்த கொச்சுமணி மகன் சார்லஸ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.