அரசு வேலை வாங்கித் தருவதாக 42 லட்சம் மோசடி செய்த நபர் கைது
மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 42 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
By : King 24x7 Website
Update: 2023-10-29 09:42 GMT
திருப்பூர் பெருந்தொழுவு கரட்டுபுதூரை சேர்ந்தவர் குபேந்திரன்.இவர் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் வீரராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.கடந்த இரண்டு வருடங்களாக திருப்பூர் செவந்தம்பாளையத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் ரூ 42 லட்சம் பெற்றுக்கொண்டு போலியான பணி ஆணையை வழங்கிய முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் குவேந்திரன் என்பவர் திருப்பூர் மாநகர கமிஷனர் பிரேம்குமார் அபினவ் உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.