சிவில் என்ஜினீயரிடம் ரூ.37.33 லட்சம் மோசடி செய்தவர் கைது

விழுப்புரத்தை சேர்ந்த சிவில் என்ஜினீயரிடம் ரூ.37.33 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-12-22 08:20 GMT

 கனக ராஜூ

விழுப்புரம் நேருஜி சாலை பகுதியை சேர்ந்தவர்  ரகுநாத் (35). இவர் கடந்த 7 ஆண்டுகளாக சிவில் என்ஜினீயரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தை சேர்ந்த கனக ராஜூ (64) என்பவர் அறிமுகமானார். அப்போது அவர், தான் புதுச்சேரியில் ஒரு தனியார் நிதி நிறுவ னத்தை நடத்தி வருவதாகவும், அது சட்டப்படி பதிவு செய்யப்பட்டது என்றும் ரகுநாத்திடம் கூறியுள்ளார். மேலும் அந்நிறுவனத்திற்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி கடன் கேட்டுள்ளார்.

அதற்கு ரகுநாத், கடந்த 2022 ஜூன் மாதம் வெவ்வேறு தேதிகளில், தனது வங்கி கணக்கில் இருந்து கனகராஜூவின் வங்கி கணக்கிற்கு ரூ.37 லட்சத்து 33 ஆயிரம் அனுப்பியுள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் அந்த பணத்தை ரகுநாத்திற்கு கனகராஜூ கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். பலமுறை கன கராஜூவிடம் சென்று ரகுநாத் கேட்டபோதிலும் இதுநாள் வரையிலும் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில் திடீரென கனகராஜு தலைமறைவாகி விட்டார், இதுகுறித்து ரகுநாத், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜூவை பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் இன்று அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News