தென்காசியில் பெண்ணிடம் பிக்பாக்கெட் அடித்தவர் கைது

Update: 2023-11-16 03:43 GMT

கைது 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவர் நேற்று தென்காசியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் தனது உறவினரை பார்ப்பதற்காக பஸ்சில் வந்துள்ளார். அவர் தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இறங்கி நின்றபோது, மர்ம நபர் ஒருவர் அவரிடம் இருந்து மணிபர்சை பிக்பாக்கெட் அடித்துச் சென்றார். இந்நிலையில் நேற்று மாரீஸ்வரி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் மீண்டும் தென்காசி புதிய பஸ் நிலையத்திற்குள் வந்தபோது, பிக்பாக்கெட் அடித்த அதே நபர் கேரளா பஸ்கள் நிற்கும் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். அதனை பார்த்த மாரீஸ்வரி, தனது கணவரிடம் தெரிவித்தார். உடனே அவர் அங்கிருந்த சக பயணிகளின் உதவியுடன் அந்த நபரை பிடித்து தென்காசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கடலூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பாஸ்கர்(46) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து  கைது செய்தனர். மணிபர்சை மீட்டு மாரீஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News