நாகையில் தடைசெய்த லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவர் கைது - பணம், பைக் பறிமுதல்
நாகையில் தடைசெய்த லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து பணம், பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Update: 2024-01-31 10:45 GMT
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை கட்டுப் பத்த உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட அதரடி சோதனையில் நாகை தேரடி அருகில் குலுக்கல் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுப்பட்ட நாகை சவுந்தராஜன் மகன் கலைமணி (57) என்பதை கைது செய்து அவரிடம் இருந்து லாட்டரி விற்பனைக்கு பயன் படுத்திய குறிப்பு நோட்டு, ரூ 2020 பணம் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து நாகை டவுன் போலீஸ்சார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.