கெங்கவல்லி அருகே கள்ளச்சாராயம் விற்ற நபர் கைது

கெங்கவல்லி அருகே கள்ளச்சாராயம் விற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-12-09 09:44 GMT
கைது செய்யப்பட்டவர்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே, நடுவலூர் ஊராட்சியில் தனியார் பள்ளி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய் யப்படுவதாக, ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜனுக்கு புகார் சென்றது. அவரது உத்தரவின் பேரில், கெங்கவல்லி எஸ்ஐ நிர்மலா, பெரியண்ணன் உள்ளிட்ட அப்பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற் கிடமாக டூவிலரில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து, அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையை ஆய்வு செய்தபோது, அதில் கள்ளச்சாரயம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், கெங்கவல்லி கடம்பூர் ரோடு மீனவர் தெருவைச் சேர்ந்த சுரேஷ்(41) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, 0லிட்டர் கள்ளச்சாராயம், டூவீலரை பறிமுதல் செய்தனர்.

பின்னர் சுரேஷை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி. ஆத்தூர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News