கஞ்சா விற்ற நபர் கைது

மாசார்பட்டியில் அத்துமீறி விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-17 09:11 GMT

மாசார்பட்டி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வெங்கடேஷ் மேற்பார்வையில் மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் விநாயகம் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாப்பாத்தி அகதிகள் முகாம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் அதே பகுதியை சேர்ந்த கனகரத்தினம் மகன் விஜயராஜன் (40) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் விஜயராஜனை கைது செய்து அவரிடமிருந்த 10 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News