ஆரோவில் வெளிமாநில சுற்றுலா பயணியிடம் பணம் திருடியவர் கைது
ஆரோவில் வெளிமாநில சுற்றுலா பயணியிடம் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-09 13:06 GMT
கைது செய்யப்பட்டவர்
மும்பையைச் சேர்ந்தவர் ஹரிஷ் சந்திரசேகர் மனைவி மைதிலி ஷெட்டி, 53; இவர் கடந்த மாதம் 30ம் தேதி ஆரோவில் பகுதிக்கு சுற்றுலா வந்தார். ஆரோவில்லில் உள்ள சரங்கா கெஸ்ட் அவுசில் அறை எடுத்து தங்கினார்.அப்போது, அவரது அறையில் பேக்கில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் திருடு போனது.
இது குறித்து அவர் ஆரோவில் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து அனுமந்தை அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கர், 50; என்பவரை நேற்று கைது செய்தனர்.