அரசு அனுமதி இன்றி மணல் திருடிய நபர் கைது !!

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடிய நபரை கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-01 06:20 GMT

காவல்துறை

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடிய நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாட்டு வண்டியில் மணல் திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி மங்களமேடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அம்பேத்கர மற்றும் அவரது குழுவினர் அகரம் சீகூர் பகுதியில் சிறப்பு ரோந்து மேற்கொண்ட போது அய்யனார் கோவில் முன்பு மாட்டு வண்டியில் மணல் திருடிக்கொண்டு வந்த இரண்டு நபர்களில் ஒருவரை பிடித்து வசாரித்தபோது அகரம் சீகூர், மாரியம்மன் கோவில் தெருபகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கனகராஜ் வயது - 30, மற்றும்அதை ஊரைச் சேர்ந்த தொட்டி மகன் பாலுசாமி வயது 53, என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இரண்டு நபர்களில் பாலுசாமி என்பவர் தப்பியோடிவிட்ட நிலையில் கனகராஜ் என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து, 1/2 யுனிட் மணல் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாலுசாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News