மணல் கடத்தியவர் கைது, டிராக்டர் பறிமுதல்
திருமயம் அருகே அனுமதியுண்டு மணல் அள்ளியவரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.;
Update: 2023-10-25 06:41 GMT
பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியதில் வரத்து வாரியிலிருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக பனையப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது அனுமதி இன்றி டிராக்டரில் மணல் அள்ளி வந்த புதுவயலைச் சேர்ந்த ரஞ்சித் குமார் வயது (30) என்பவரை போலீசார் கைது செய்து டிராக்டர் பறிமுதல் செய்தனர்.