தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-07 11:39 GMT
கடையநல்லூா் அருகே தொழிலாளி தற்கொலை
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.சிந்தாமணியை சோ்ந்த ஆறுமுகம் மகன் அஜய் (29). மங்களாபுரத்தில் உள்ள கோழிப் பண்ணையில் வேலை செய்து வந்தாா். குடும்ப பிரச்னை காரணமாக பூச்சி மருந்தை குடித்த அஜய், ஆபத்தான நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Tags:    

Similar News