சேலத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் அருகே குடும்ப பிரச்சனையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-01-07 13:15 GMT
தொழிலாளி தற்கொலை
சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45), கூலித்தொழிலாளி. இவர் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் வரை அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். அப்போது வீட்டுக்குள் கண்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினையில் கண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.