மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-02-14 05:50 GMT
தற்கொலை
உளுந்துார்பேட்டை அடுத்த களத்துார் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் மகேந்திரன், 27. இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகிறது. இவரது மனைவி சவுமியா. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
மகேந்திரன், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனை சவுமியா கண்டித்தார். மனமுடைந்த மகேந்திரன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.