குழந்தையுடன் மனைவியை காணவில்லை கணவன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்
காணாமல் போனவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்;
Update: 2023-12-16 07:15 GMT
மனைவி காணவில்லை என கணவன் காவல்நிலையத்தில் புகார்
தேவூர் அருகே உள்ளஅரசிராமணி செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மாதையன் மகன் சரவணகுமார் (32). அவரது மனைவி பிரியா (27), மகள் தேவசேனா (5). டிசம்பர் 4ம் தேதி பிரியா குழந்தையை எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் விட்டு விட்டு திரும்ப வீட்டிற்கு வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இருவரையும் சரவணகுமார் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து சரவணகுமார் தேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையெடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையுடன் காணாமல் போன தாயை தீவிரமாக தேடி வருகின்றனர். குழந்தையுடன் தாய் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.