இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக சொன்னவர் சுயேட்சை ஆகிவிட்டார்

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக சொன்னவர் சுயேட்சை ஆகிவிட்டார் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.;

Update: 2024-03-23 12:36 GMT

 இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக சொன்னவர் சுயேட்சை ஆகிவிட்டார் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். 

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கோவை, பொள்ளாச்சி,நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், “அண்ணாமலை மட்டுமல்ல எந்த இமயமலை வந்தாலும், திருவண்ணாமலை அருளால் ராமச்சந்திரன் மாபெரும் வெற்றியை பெறுவார் எனவும் அதிமுக வெற்றி வித்தியாசம் குறைவாக இருக்காது என்ற அவர் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராமச்சந்திரன் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.ஊட்டியில் உலகத்தின் மிகப் பெரிய ஊழல் மன்னன்,ஆணவம் பிடித்தவரை எதிர்த்து லோகேஷ் நிற்பதாகவும் கொங்கு மண்டலத்தின் ஐந்து பிரதான தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக சொன்னவர் சுயேட்சையாக மாறிவிட்டார் என்றார்.

Advertisement

தனது உயிர் போய் விடும் எனத் தெரிந்தும் ஜெயலலிதா நம்மை எல்லாம் ஜெயிக்க வைத்தார் எனவும் எம்ஜிஆர்,அம்மா வழியில் இரட்டை இலையை எதிர்க்க எந்த கொம்பாதி கொம்பனாலும் முடியாது என தெரிவித்தார்.நேற்று நமது தொண்டர்கள் இருந்த நிலை வேறு இன்று நமது மானத்திற்கு சவால் வந்துள்ளது எனவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய இந்த தேர்தலில் வெல்வது அதிமுகவாக இருக்க வேண்டும் என்றவர் அதிமுக வேட்பாளர்கள் வெல்வது உறுதி எனவும் அவர்கள் டெல்லிக்கு செல்வது உறுதி” எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News