கொசஸ்தலை ஆற்றில் மண் அள்ளியவர் கைது - 5 வாகனங்கள் பறிமுதல்

பெரியபாளையம் அருகே கொசஸ்தலை ஆற்றின் ஓரமாக சட்டவிரோதமாக சவுடு மண் அள்ளியவரை கைது செய்த போலீசார் 3 லாரிகள்,2 ஜேசிபி இயந்திரங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-06-25 07:53 GMT
கொசஸ்தலை ஆற்றில் மண் அள்ளியவர் கைது - 5 வாகனங்கள் பறிமுதல்

கைது செய்யப்பட்ட கமலநாதன் 

  • whatsapp icon
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் அருகே சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரம் மூலம் லாரிகளில் மண் அள்ளுவதாக பெரியபாளையம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி சென்றனர். மேலும் சட்டவிரோதமாக மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய 3 லாரிகள்,2 ஜேசிபி இயந்திரம்,மற்றும் லாரி ஓட்டுனரான வானியன்சத்திரம் பகுதி சேர்ந்த கமலநாதன் (45) என்பவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.பின்னர் அவரை  ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 7 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News